திறக்கப்பட்டது பழங்கால யூதர்கள் வழிபாட்டு தலம்...

கேரளாவின் கொச்சி நகரில் உள்ள காவும்பகம் யூதர்கள் வழிபாட்டு தலத்தின் 818 வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Update: 2018-12-07 04:58 GMT
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள காவும்பகம் யூதர்கள் வழிபாட்டு தலத்தின் 818 வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவானதை தொடர்ந்து, யாஹூடா பிரிவு இந்திய யூதர்கள் இஸ்ரேலில் குடிபெயர்ந்தனர். இதனால் வெகு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த தலம், தற்போது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று முதல் முறையாக யாஹூடா மக்களின் புனித நூலான "சேஃப்பர் தோரா"  இஸ்ரேலில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த பிராத்தனை கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்