2.0 படத்திற்கு எதிர்ப்பு - கன்னட அமைப்பினர் போராட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டூ பாய்ண்ட் ஓ படம் திரையிடப்பட்ட தனியார் திரையரங்கத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-11-29 08:45 GMT
கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  டூ பாய்ண்ட் ஓ படம் திரையிடப்பட்ட தனியார் திரையரங்கத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறமொழி படங்களுக்கு அதிலும்  குறிப்பாக தமிழ் படங்களுக்கு அதிக திரையரங்கங்கள் ஒதுக்கப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  தமிழ் படங்களுக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சிகள் ஒலிபரப்ப படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், ரஜினியின் 2.0 படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்