சிபிஐ-க்கு வழங்கப்பட்ட "பொது சம்மதம்" திரும்ப பெறப்பட்டது - ஆந்திர மாநில அரசு அரசாணை வெளியீடு

மாநில அரசின், எந்த ஒரு வழக்கிலும், விசாரணையை நடத்துவதற்காக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த பொது சம்மதத்தை, ஆந்திர அரசு திரும்பப் பெற்றுள்ளது.

Update: 2018-11-17 05:16 GMT
* இதனால், மாநில அரசின் வரம்புக்குள்ளே, நடைபெறும் எந்த வழக்கிலும் சிபிஐ தலையிட முடியாது. இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக, ஊழல் வழக்குகளில், சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்கள் மீது நம்பிக்கை இழந்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

* மாநில அரசின் இந்த முடிவால், சிபிஐ அமைப்பு இனி ஆந்திராவில் எந்த ஒரு சோதனையையும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இனி, மாநில ஊழல் தடுப்புத்துறை மட்டுமே இது போன்ற சோதனைகளில் ஈடுபட முடியும்.  

Tags:    

மேலும் செய்திகள்