டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய இப்போட்டி 21 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தது.

Update: 2018-10-21 04:21 GMT
டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய இப்போட்டி 21 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தது. டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக மாரத்தான் போட்டியில்  கலந்து கொண்டவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனாலும் அனைவரும் உற்சாகமாக போட்டியில் பங்கேற்று ஓடினர். 
Tags:    

மேலும் செய்திகள்