பாபர் மசூதி வழக்கில் 2019 ஏப்ரலுக்குள் விசாரணை முடியுமா? - உச்சநீதிமன்றம் கேள்வி

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் விசாரணை முடிக்கப்படுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-09-11 08:31 GMT
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜோஷி மற்றும் 19 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டனர். 

இதன்படி இந்த வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை முடியும் வரை நீதிபதி யாதவின் பதவி உயர்வை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நீதிபதி யாதவ், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எத்தனை நாட்களில் வழக்கு விசாரித்து முடிக்கப்படும் என்பதை சீலிட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்