செப். 10 - ல் நாடு தழுவிய காங். போராட்டம்...

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 10 ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Update: 2018-09-06 16:27 GMT
பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 10 ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்டக்குழு, புதுடெல்லியில் கூடி, ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல், பொறுப்பாளர் அசோக் கெலாட் , மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை செய்தியாளர்களிடம் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வால், விவசாயிகள், சிறு வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கவலை தெரிவித்தார். எனவே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வருகிற 10 ம் தேதி, நாடு தழுவிய அளவில், காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ரன்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார்.

 நாடுதழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு
   10-ம் தேதி இடதுசாரி கட்சிகளும், மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை ஆகியற்றை கண்டித்தே இந்த போராட்டம் என்று இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.




Tags:    

மேலும் செய்திகள்