டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவு...
பதிவு: செப்டம்பர் 05, 2018, 09:47 PM
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இன்று காலை சற்று உயர்ந்த நிலையில், மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்தித்து உள்ளது. நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 58 காசுகளாக இருந்த நிலையில், இன்று காலை சற்று உயர்ந்து 71 ரூபாய் 43 காசுகளாக இருந்தது. தற்போது மேலும் சரிந்து 71 ரூபாய் 97 காசுகளாக சரிந்து தற்போது சற்று உயர்ந்து 71 ரூபாய் 87 காசுகளாக உள்ளது. தங்கத்தை வங்கிகளும், இறக்குமதியாளர்களும் காலையில் வாங்கியதால் ரூபாயின் மதிப்பு சிறிது நேரம் உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடை,  அமெரிக்க பொருளாதார, டாலரின் வளர்ச்சி ஆகியவை ரூபாயின் மதிப்பு சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.