நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை
பதிவு: செப்டம்பர் 05, 2018, 05:03 PM
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி சென்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அகில இந்திய கிஷான் சபா, அகில இந்திய வேளாண் தொழிலாளர் யூனியன், மஸ்துர் கிஸான் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பாக இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.