திருடு போனது நிஜாமின் தங்க டிஃபன் பாக்ஸ் - தேடும் பணியில் 10 தனிப்படைகள் தீவிரம்

சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிஜாமின் தங்க டிபன் பாக்ஸ் தேநீர் கோப்பை திருடு போயுள்ளன.

Update: 2018-09-05 08:28 GMT
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நிஜாம் அருங்காட்சியம் அமைந்துள்ளது. இங்கு ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்கம் மற்றும் வைரத்திலான சுமார் 450 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இதில், வைரம் பதித்த தங்க டிஃபன் பாக்ஸ் மற்றும் தங்க தேநீர்க் கோப்பை, அதனுடைய ஸ்பூன் ஆகியன திருடு போயுள்ளன. இந்த தகவலை, ஹைதராபாத் நிஜாம் அருங்காட்சியகத்தின் சமூக வலை தள பக்கத்தில், பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடும் பணியில், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்