6 மாநிலங்களில் நிர்ணயித்துள்ள விகிதாச்சாரத்தை விட மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்

ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என, உலக சுகாதார மையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த விகிதாச்சாரத்தின்படி, இந்தியாவில் தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Update: 2018-09-02 08:49 GMT
டெல்லியில் 334 பேருக்கு ஒரு மருத்துவரும், கர்நாடகாவில் 507 பேருக்கு ஒரு மருத்துவரும், கேரளாவில் 535 பேருக்கு ஒரு மருத்துவரும், கோவாவில் 713 பேருக்கு ஒரு மருத்துவரும், பஞ்சாபில் 789 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர். 

அதேநேரம், ஜார்க்கண்ட், அரியானா, சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் நேர்மாறாக உள்ளது. 

இதன்படி, ஒரு மருத்துவருக்கு, ஜார்க்கண்டில் 8 ஆயிரத்து 180 பேரும், அரியானாவில் 6 ஆயிரத்து 37 பேரும் உள்ளனர்.மேலும், ஒரு மருத்துவருக்கு, சட்டீஸ்கரில் 4 ஆயிரத்து 338 பேரும், உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 767 பேரும், பீகாரில் 3 ஆயிரத்து 207 பேரும்,இமாச்சல பிரதேசத்தில் 3 ஆயிரத்து 124 பேரும் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 253 பேருக்கு, ஒரு மருத்துவர் உள்ளனர் - உலக சுகாதார மையம் நிர்ணயம்

தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, கோவா, பஞ்சாப் மாநிலங்களில் மக்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்

மருத்துவர் - பொதுமக்கள் விகிதம்-  டெல்லி 1= 334, கர்நாடகா 1= 507, கேரளா 1= 535, கோவா 1= 713, பஞ்சாப் 1= 789 

விகிதாச்சாரம்: ஜார்க்கண்ட், அரியானா, சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேச மாநிலங்களில் நேர்மாறாக உள்ளது

மருத்துவர் - பொதுமக்கள் விகிதம்-  ஜார்க்கண்ட் 1= 8180, அரியானா 1= 6037, சட்டீஸ்கர் 1= 4338, உத்தரபிரதேசம் 1= 3767, பீகார் 1= 3207, இமாச்சல பிரதேசம் 1= 3124
Tags:    

மேலும் செய்திகள்