2வது நாளாக 6 நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில், பிம்ஸ்டெக் என்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது.

Update: 2018-08-31 16:56 GMT
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், பிம்ஸ்டெக் என்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. வங்க கடலை ஒட்டியுள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளின்
தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்றனர். நிறைவு நாள் மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி, 6 நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.குறிப்பாக, தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களை தனியாகவும் பிரதமர் மோடி சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த மாநாட்டின் முடிவில், வறுமையை ஒழிப்பது- தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட 18 அம்சங்கள் கொண்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திரமோடி, தனி விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்