வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் தகவல்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அதற்காக இந்தியாவுக்கென்று ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

Update: 2018-08-27 09:09 GMT
வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் தகவல்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அதற்காக இந்தியாவுக்கென்று ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கண்காணிப்பு அலுவலரை வாட்ஸ்-அப் நிறுவனம் இன்னும் நியமிக்கவில்லை. 

இதையடுத்து, அலுவலரை ஏன் நியமிக்கவில்லை என்பது குறித்து, தகவல் தொழில்நுட்பதுறை, நிதித்துறை மற்றும் வாட்ஸ்- அப் நிறுவனம் ஆகியோர், 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வதந்திகளை முதலில் அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும், வாட்ஸ்-அப் நிறுவனம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்