குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ராக்கி கயிறு விற்பனை...
பதிவு: ஆகஸ்ட் 25, 2018, 11:52 AM
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷாபந்தன் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் சகோதர, சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை பரிமாறிக் கொள்வர்.  குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 50 பிரபலங்களின் உருவப்படம் பொருத்திய, தங்கத்தினாலான ராக்கி கயிறு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும் இந்த ராக்கி கயிறுக்கு, கடும் கிராக்கி நிலவுவதாக, கடை உரிமையாளர் தெரிவித்தார்.