ஆந்திரா சாலை விபத்து : 6 பேர் பலி
பதிவு: ஆகஸ்ட் 24, 2018, 02:56 PM
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சக்கரப்பள்ளி என்ற இடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் வேன்கள் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றவர்கள் விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.