சித்துவை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
பதிவு: ஆகஸ்ட் 22, 2018, 11:37 AM
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவுக்கு, காங்கிரசை சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து சென்றிருந்தார். அங்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதியை சித்து கட்டிப் பிடித்ததால், அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க. இளைஞரணி சார்பாக கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது, போலீசாருடன் மோதல் ஏற்பட்டதால், தடியடி நடத்தப்பட்டது.