கேரளாவில் மழை,வெள்ள பாதிப்பு : உயிரிழப்பு 324 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-08-17 14:06 GMT
கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக மத்திய கேரள பகுதிகளான எர்ணாகுளம்,கொச்சி, கோட்டயம்,பத்தனம் திட்டா ஆகிய பகுதிகள்,பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. திரும்பிய திசையெங்கும் தண்ணீராக காட்சி அளிக்கும் இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, ஆயிரத்து 658 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2 லட்சம் பேர், இந்த முகாம்களில் தங்கி உள்ளனர்.இதனிடையே,கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்