வட இந்தியாவிலும் ஆடி மாதம் கொண்டாட்டம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வடஇந்தியாவில் "சாவன்" மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று, சிவன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Update: 2018-08-06 04:51 GMT
'சாவன்' என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது.  கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள கோவில்களில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதனையடுத்து சவான் புனித மாதம் தொடங்கி, இரண்டாவது திங்கட்கிழமையான இன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு, புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற பாபுல்நாத் கோயிலில்  பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்