13 வயதில் இளம் தொழில் முனைவோர் - 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பளித்த சிறுவன்

இளம் தொழில் முனைவோராகி, 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளித்து, சாதனை புரிந்துள்ளார்.

Update: 2018-08-06 03:56 GMT
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த திலக் மேத்தா (Tilak Mehta) எனும் 13 வயதுச் சிறுவன், இப்போது ஓர் இளம் தொழிலதிபராக, வலம்வருகிறார்..இவரது, ''Papers N Parcels'' என்ற PNP நிறுவனம் மும்பை நகருக்குள் அனுப்பும் கடிதங்களையும், சிறு பண்டல்களையும், சில மணி நேரத்திற்குள்ளாக கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தைத் தொடங்கியதன் பின்னணி, சுவாரஸ்யமானது. திலக் ஒரு முறை தமது பாடப் புத்தகங்களை, உறவினர் வீட்டில் மறந்து, வைத்துவிட்டார். அதைத் திரும்பப்பெற, வேலையிலிருந்து மிகவும் தாமதமாகவும், களைத்துப் போயும் வந்திருந்த, தமது தந்தையை, மீண்டும் அலைய வைக்க வேண்டியிருந்தது. இந்தச் சம்பவமே,  கடிதங்கள் மற்றும் சிறு பண்டல்களை அனுப்பவும், பெறவுமான சேவைகளை ஆரம்பிக்க உந்துதலாக இருந்துள்ளது. 
மும்பையில், மதிய உணவை கொண்டு செல்வதற்கு டப்பாவாலாக்கள் எனப்படும் குழுவினர் ஏற்கெனவே இயங்கி வருகின்றனர். அவர்களின் வலை தொடர்பையே இந்தப் புதிய சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள திலக் முடிவு செய்தார். நான்கு மாதங்களுக்கு மேல் சோதனை முயற்சியாக இந்த சேவையை நடத்திப் பார்த்து, அதன் வெற்றியை உறுதி செய்து கொண்ட பின்னர், இப்போது இவரது நிறுவனம், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

"Papers N Parcels" என்பது, அடிப்படையில், டிஜிட்டல் கூரியர் சேவையாகும். உங்கள் பண்டலை தரலாம் அல்லது எங்களது செயலி மூலம், பதிவு செய்யலாம். எங்களது பணியாளர், உங்கள் வீட்டிற்கு வருவார் அல்லது நீங்கள் கூறிய இடத்தில் இருந்து, பண்டலை பெற்று வருவார். உங்களால், வாங்கவும், விநியோகிக்கவும், முடியும். ஒரே நாளில் எங்களது பணியை நிறைவு செய்கிறோம். இந்த வசதிகள், உரிய விலையில் கிடைக்கின்றன.ஸ்மார்ட் போனில் இந்த சேவைக்கென தனி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்களின் ஒத்துழைப்போடு, தமக்கென 200 தொழிலாளர்களையும் கொண்டுள்ள, திலக்-ன் இந்த நிறுவனம் நாளொன்றுக்கு ஆயிரத்து 200 கடிதங்கள் மற்றும் பண்டல்களை விநியோகம் செய்து வருகிறது. மும்பையில் ரயில் வழித்தடங்களில் உள்ள பகுதிகளில் மட்டுமே, தற்போது இந்த சேவை வழங்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்