சிறுமிகள் பாலியல் பலாத்கார குற்றங்கள்- மரண தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-07-31 08:19 GMT
சிறுமிகள் பாலியல் பலாத்கார குற்றங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட திருத்த மசோதா மீது சுமார் 2 மணிநேரம் மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம்  சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. சிறுமிகள் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வகையில் நாடு முழுவதும் விரைவு சிறப்பு கோர்ட்டுகளை அமைத்திடவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது. 

இந்த சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும். இது முன்பு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்