விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்...

ஒடிசாவில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்துவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2018-07-23 10:43 GMT
ஒடிசாவில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்துவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக 25 க்கும் மேற்பட்ட யானைகள் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் முகாமிட்டு, விவசாய நிலங்களை நாசம் செய்தன. இந்த யானை கூட்டத்தால் இரவு நேரங்களில் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. யானைகளை உடனடியாக விரட்டாமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டியதால், தாங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்