உத்தரபிரதேசம் : இளைஞரை தரதரவென இழுத்துச் சென்ற காவலர்கள்

பித்தளை பக்கெட் திருடியதாக, இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து, போலீசிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2018-07-13 07:55 GMT
உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை, இரண்டு காவலர்கள், மருத்துவமனைக்கு தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பித்தளை பக்கெட் திருடியதாக, இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து, போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த நபரை, இரண்டு காவலர்கள் சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு தரதரவென இழுத்துச் சென்றனர். இதன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை இழுத்து சென்ற காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்