கபினி அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு
கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியில் இருந்து, 45 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.;
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிக்கமகளூரு, குடகு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் கபிணி அணைக்கு நீர்வரத்து 46 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியில் இருந்து 45 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம், அதன் மொத்த கொள்ளளவான 2 ஆயிரத்து 284 அடியில், 2 ஆயிரத்து 282 அடியாக உள்ளது. தமிழகத்திற்கு, இந்த மாதம் 34 டி.எம்.சி. நீரை கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வரை 23 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.