கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கும் பெண்கள்...

இலவசமாக நாப்கின்கள் தயாரிக்கும் இளம்பெண்கள் அதை கிராமப்புற பெண்களுக்கு வழங்கி வருகின்றனர்.;

Update: 2018-07-12 14:05 GMT
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் கொண்ட ஒரு குழு, சானிடரி நாப்கின்களை தயாரித்து, அருகிலுள்ள குடிசைப்பகுதி பெண்களுக்கு இலவசமாக வழங்கினர். சுகாதாரமான முறையில் பெண்கள் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் நாப்கின்களை வழங்கினர். பேட் மேன் படத்தை பார்த்து தங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும், தொடர்ந்து இதனை பல்வேறு பகுதிகளுக்கு வழங்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பெண்களுக்கு நாப்கின்களை செய்ய கற்றுத் தரும் எண்ணம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
Tags:    

மேலும் செய்திகள்