கர்நாடக : வெள்ளத்தில் சிக்கி 92 வயது மூதாட்டி பலி

உடலைக் கொண்டு வர 10 மணி நேரம் போராடிய உறவினர்கள்;

Update: 2018-07-09 10:24 GMT
கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள காப்பு என்ற பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, 92 வயது  மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். வீடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், மூதாட்டியின் சடலத்தை வெளியில் கொண்டு வர அவரது குடும்பத்தினர் பத்து மணி நேரத்திற்கும் மேலாக போராடியுள்ளனர்.  தகவல் அறிந்து வந்த பக்கத்து கிராம மக்கள், மூதாட்டியின் சடலத்தை மீட்க உதவி செய்தனர். இதேபோன்று, நேத் ராவதி ஆற்றில் சிக்கியவர்கள் அனைவரும் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்