தாவரவியல் மாணவரின் அரிய கண்டுபிடிப்பால் உருவான டிஜிட்டல் தோட்டம்

இந்தியாவின் முதல் டிஜிட்டல் தோட்டம் தாவரவியல் மாணவரின் அரிய முயற்சி

Update: 2018-07-07 09:20 GMT
* டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் வகுப்புகள் என, பலவும் டிஜிட்டல் மயமாகி, வரிசையில் நிற்கும் நிலையில், டிஜிட்டல் தோட்டமும் உருவாகிவிட்டது.

* கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அகிலேஷ் எஸ்.வி.நாயர், எம்.எஸ்சி., தாவரவியல் படித்து வருகிறார்.  இயற்கை மீதும், அறிவியல் மீதும் தீராத காதல் கொண்ட அகிலேஷ், மத்திய அரசின் ''டிஜிட்டல் இந்தியா''வுக்கு, புகழ் சேர்க்கும் விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 

* இதன் விளைவாக, 126 வகையான தாவரங்களை ஆய்வு செய்து, அதன் தன்மைகள் மற்றும் இயல்புகளை அட்டவணைப்படுத்தியுள்ளார். இந்த தகவல்களை, QR code மூலம், செல்ஃபோனில் பார்க்கும் வகையில், டிஜிட்டல் மயமாக்கியுள்ளார். 

* ஒரு மரத்தைப் பார்த்து விட்டு, அது என்ன மரம்? தன்மைகள் என்ன? மருத்துவ குணங்கள் உண்டா, தாவரவியல் பயன்பாடு என்ன என்பன உள்ளிட்ட அனைத்தையும் கையில் உள்ள செல்போனில் அறிந்து கொள்ளலாம். 

* திருவனந்தபுரத்தில் உள்ள கனகக்குன்னு அரண்மனை வளாகத்தில் உள்ள இந்த மரங்கள், QR code உடன், தமது வரலாற்றை தாங்கி நிற்கிறது. 

* கனகக்குன்னு அரண்மனை, 21 ஏக்கரில், உயிரியல் பல்வகை, சுற்றுசூழல் மேலாண்மையின் தனித்துவ மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், இங்குள்ள அனைத்து மரம், தாவரங்கள் தொடர்பாக, QR குறியீடு மூலம், கூடுதல் தகவல்களை அனைவரும் பெற முடியும். இதன் மூலம், கனகக்குன்னு அரண்மனை, இந்தியாவின் முதல் டிஜிட்டல் தோட்டமாகும்.

* மரங்கள், தாவர இனங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, சுற்றுச்சூழல் மற்றும் தாவரவியல் மீதான ஈர்ப்பை பொது மக்களின் கொண்டு செல்வது தான் இதன் நோக்கம் என்றும், அகிலேஷ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்