ராகுல் காந்தி பிரதமராக யோசனை கூறிய தெலுங்கு தேசம் எம்.பி
ராகுல்காந்தி பிராமணப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்;
* பிராமண பெண்ணை ராகுல்காந்தி திருமணம் செய்தால் பிரதமராக வாய்ப்பு இருப்பதாக தெலுங்குதேசம் எம்.பி திவாகர் ரெட்டி யோசனை தெரிவித்திருக்கிறார்.
* ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காகவே ஆந்திர மாநிலத்தை சோனியா காந்தி இரண்டாக பிரித்ததாகவும், ஆனால் அது சரியான முடிவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
* உத்தரப் பிரதேசத்தில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கும் பிராமணச் சமூகத்தில் இருந்து நல்ல பிராமணப் பெண் ஒருவரை ராகுல் காந்திக்கு திருமணம் செய்தால் அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறிய திவாரகர் ரெட்டி, தமது யோசனையை சோனியா காந்தி கேட்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.