இந்தியாவை பாதிக்கும் பருவநிலை மாற்றம் : 2050-ம் ஆண்டுக்குள் ஜி.டி.பி. 2.8 % குறையும் அபாயம்

பருவகால மாற்றத்தால், இந்தியாவில் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2.8 சதவீதம் அளவுக்கு குறையும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

Update: 2018-07-01 14:37 GMT
பருவகால மாற்றத்தால், இந்தியாவில் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2.8 சதவீதம் அளவுக்கு குறையும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பருவகாலத்தில் சரியாக மழை பெய்யாமல் இருப்பது; கோடை காலங்களில் அதிகரிக்கும் வெப்பநிலை, கடல் நீர்மட்டம் போன்ற விளைவுகள் சமீபமாக அதிகரித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் சராசரி வெப்ப அளவு 1.5 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படக்கூடிய விளைவு குறித்த ஆய்வை, உலக வங்கி நடத்தியது.

செளத் ஆசியா ஹாட் ஸ்பாட்ஸ்'  என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வறிக்கையில், `இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, 2050ஆம் ஆண்டுக்குள் 2.8 சதவீதம் சரியும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்கள் 9 சதவீதம் வரை உற்பத்தி குறைவை சந்திக்கும் எனவும், 
மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகும் 10 மாவட்டங்களில் 7, மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவும் ஒன்று எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாவட்டம், விவசாயிகள் தற்கொலையில் முன்னணியில் உள்ள பகுதியாகும்..
Tags:    

மேலும் செய்திகள்