தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி - அமைச்சர் உதயகுமார்
பதிவு: ஜூன் 20, 2018, 08:15 AM
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை

மேலூரை அடுத்த சேக்கிபட்டியில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய உள்ளதாக தெரிவித்தார்.  இதுதொடர்பான தகவலை மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் சஞ்சய் ராய் தமக்கு  அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் குறிப்பிட்டார். இதன் மூலம் டெல்லியில் கிடைக்கும் அனைத்து உயர் மருத்துவ சிகிச்சைகளும் மதுரையிலும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.