சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது - சமூக ஆர்வலர்கள் கேள்வி

சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2018-06-13 05:05 GMT
சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.


சாலை போடுகிற தனியார் நிறுவனங்கள் 30 ஆண்டு காலத்திற்கு வருவாய் ஈட்டுகின்ற போது, நில உரிமையாளர்கள் ஏன் சுங்க வருவாயில் பங்கு பெறக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சாலை போன்ற வளர்ச்சி திட்டங்களில் நிலத்தை கொடுப்பவர்களையும் ஏன் பங்குதாரர்களாக வைக்கக்கூடாது எனவும், சாலை போடுகிற நிறுவனங்கள் ஈட்டும் சுங்க வருவாயில் நில உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து பங்கு கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நில உரிமையாளர்களுக்கு ஒரே தவணையாக பணம் வழங்குவதை மாற்றி, வளர்ச்சி திட்டங்களில் அவர்களையும் பங்குதாரர்களாக்குவதுடன், நிலம் கையகப்படுத்தும் முறையையும் மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்