"நடிகர் விஜய் அவரது தந்தையை சந்தித்தது வழக்கமான நிகழ்வு" - விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்

Update: 2023-09-17 01:56 GMT

நடிகர் விஜய் தமது தந்தையை சந்தித்தது வழக்கமான நிகழ்வு என விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடலூரில், ராமசாமி படையாட்சியின் பிறந்தநாளையொட்டி, அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர் அணியின் ஆலோசனை விரைவில் நடைபெற உள்ளதாகவும், தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றார். நடிகர் விஜய், தமது தந்தையை சந்தித்தது வழக்கமான நிகழ்வு என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்