அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.;
அறிவழகன் இயக்கியுள்ள இந்த படத்தில், ஸ்டேஃபி பாட்டேல் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். பார்டர் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.