"நடிகர் சங்க தேர்தல் செல்லாது" - மறு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-24 11:27 GMT
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வில்லை என குற்றம்சாட்டி, உறுப்பினர் ஏழுமலை உள்ளிட்டோர் ​தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த, அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், நாசர், கார்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்து, அதை வெளியிட்டு 3 மாதங்களுக்குள் மறு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் நடத்த உத்தரவிட்ட அவர், தேர்தல் நடைபெறும் வரை சிறப்பு அதிகாரி கீதா, நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிப்பார் என, அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்