"பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா : விஜய் ரசிகர்கள் மீது தடியடி"

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய் ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும் போலீசாரால் தடியடி நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-19 20:31 GMT
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தவிர விழாவிற்கு வந்த சினிமா பிரபலங்களும் இந்த கூட்டத்தில் சிக்கி தவித்தனர். இதனால், வெளியே நின்றிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் தங்களிடம் பாஸ் இருப்பதாக கூறி விஜய் ரசிகர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்