வசூல் சாதனை நிகழ்த்திய 'கரகாட்டக்காரன்' 2-ம் பாகம்

ராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய 'கரகாட்டக்காரன்' 2-ம் பாகம் தயாராக உள்ளது.

Update: 2019-05-31 03:43 GMT
ராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய 'கரகாட்டக்காரன்' 2-ம் பாகம் தயாராக உள்ளது. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் நடித்து 1989-ல் கரகாட்டக்காரன் திரைக்கு வந்து, வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற, இனிமையான பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

இந்நிலையில், இயக்குநர் கங்கை அமரன் கூறும்போது, "கரகாட்டக்காரன் 2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேசி வருவதாகவும், இப்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்