மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் வடிவேலு

வடிவேலு நடிக்கும் "பேய்மாமா"

Update: 2019-03-04 17:57 GMT
ஷக்தி சிதம்பரம் இயக்கும் பேய்மாமா என்ற படத்தில் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் இங்லீஷ்காரன், கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட படங்களில் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அந்த படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் மீண்டும் ஷக்தி சிதம்பரம்-வடிவேலு இருவரும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். கடைசியாக, 2015-ஆம் ஆண்டு வெளியான எலி படத்தில் கதாநாயகனாக நடித்த வடிவேலு, அதன்பிறகு கத்திசண்டை, சிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.  இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்