டப்பிங் யூனியனிலிருந்து பாடகி சின்மயி நீக்கம்

டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-17 21:50 GMT
டப்பிங் யூனியனிலிருந்து தாம்  நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதனால் இனி தமிழ்படங்களில் பின்னணி பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சின்மயி  தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.   2 ஆண்டுகளாக உறுப்பினர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி டப்பிங் யூனியன் தன்னை நீக்கியுள்ளதாகவும், இதன் மூலம் தனது வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும் பாடகி சின்மயி குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்