"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்

ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2018-11-09 12:50 GMT
விஜய் நடித்த சர்கார் படத்தை ஏற்கனவே அறிவித்தபடி படம் வெளியான நாளே இணையதளத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. அதுபற்றிய சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் ராக்கர்சின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், பட தயாரிப்பாளர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்