ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் யார்?- கமலா? மோகன்லாலா?

படத்தின் கவுரவ வேடங்களில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-08-21 06:18 GMT
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்பது தெரிந்த செய்தி தான். ஆதித்யா பராத்வாஜ் தயாரிக்கும் இந்த படத்தை,விஜய் இயக்குவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் படத்தின் கவுரவ வேடங்களில் நடிகர் கமல்ஹாசன் மற்றும்,மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகைகள் அனுஷ்கா, ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை


ஜெயலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குநர் பாரதிராஜாவும் திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படத்திற்கு "அம்மா-புரட்சி தலைவி" என்று பெயர் சூட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.தலைப்பில் படமாக தயாராக உள்ளது.ஆதித்யா பரத்வாஜ்வின் தயாரிப்பில் படத்தின் இயக்குனராக பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்க நடிகைகள் அனுஷ்கா செட்டி மற்றும் ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.படத்திற்கு இசை அமைக்க இளைய ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்