நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி...!

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்,வழக்கு தொடர்ந்த சினிமா பைனான்சியருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Update: 2018-07-25 06:53 GMT
        நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்,வழக்கு தொடர்ந்த சினிமா பைனான்சியருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
       நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.பணத்தை தான் தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா தெரிவித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தனது பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரிராஜாவுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கும் படி ரஜினிகாந்த்க்கு உத்தரவிட கோரி  போத்ரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர் தான் வழக்கு தொடர முடியுமே தவிர,நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறினார்.மேலும்,பிரபலங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை ஆரம்பகட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
      இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை என்பதால், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி சதீஷ்குமார்,மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 




Tags:    

மேலும் செய்திகள்