"களவாணி 2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் மாதவன் வெளியிட்டார்.
விமல், ஓவியா மீண்டும் இணைந்து நடித்துள்ள "களவாணி 2";
களவாணி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சற்குணம் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'களவாணி' படத்தில் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தனர். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. விமல், ஓவியா மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை, சற்குணமே தயாரித்தும் இருக்கிறார். களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மாதவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.