கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தாங்கள் கண்டுப்பிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
x
AstraZeneca என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த தடுப்பு மருந்துக்கு, ChAdOx1 nCoV-19 சாடாக்ஸ் ஒன் நோவல் கொரோனா வைரஸ் 19 என பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரத்து 77 பேரின் உடலில் செலுத்தி செய்யப்பட்ட முதல்கட்ட சோதனையில், இந்த மருந்து நல்ல பலன் கொடுத்திருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மனிதர்களின் உடலில் வைரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பு மருந்து உருவாக்கி இருப்பதாக மருத்துவ இதழான லான்செட் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்