"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது - பல்வேறு நாடுகளை  சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்
x
காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என, உலக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, முடியும் உலக சுகாதார அமைப்பிற்கு, 32 நாடுகளை சார்ந்த 239 விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆதாரங்களை இணைத்து கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும், அடுத்த வாரம் அறிவியல் இதழில் வெளியிடப் போவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காற்றில் சிறிய துகள்களாக இருக்கும் கொரோனா வைரஸ் மற்றொரு மனிதரை பாதிக்கும் என அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்