கொரோனா சிகிச்சை பெற்றபடி அலுவலக பணியாற்றும் ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின்

ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியாற்றி வருகிறார்.
கொரோனா சிகிச்சை பெற்றபடி அலுவலக பணியாற்றும் ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின்
x
ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியாற்றி வருகிறார். கடந்த 30 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவ்வப்போது ஆவணங்களை பார்ப்பதாகவும், பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும், அதே சமயம் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்