கர்தார்பூர் சாலை வரும் 9-ம் தேதி திறப்பு:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார்

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 150-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கர்தார்பூர் சாலை வரும் 9-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.
கர்தார்பூர் சாலை வரும் 9-ம் தேதி திறப்பு:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார்
x
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நோர்வல் மாவட்டத்தில் கர்தார்பூரில் சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. இங்கு தான் சீக்கியர்களின் குருவான குரு நானக்கின் நினைவிடம் உள்ளது. இந்தியாவின் பஞ்சாப்பிலிருந்து சீக்கிய பக்தர்கள் கர்தார்பூர் சென்று  வழிபடுவது வழக்கம். 
அதன்படி குர்தாஸ்பூரில் இருந்து கர்தார்பூருக்கு செல்வதற்கு 4 புள்ளி 3 கிலோ மீட்டர் துாரத்துக்கு சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்  இந்தியாவும் - பாகிஸ்தானும் தங்கள் நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையை அமைத்துள்ளன. இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் தலா  ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் தான் இந்த சாலை வழியாக கர்தார்பூருக்கு செல்ல முடியும் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் நீண்ட இழுபறிக்கு பின் இந்தியா கையெழுத்திட்டது. 


Next Story

மேலும் செய்திகள்