கம்போடியாவின் கெமர் மொழியில் திருக்குறள் - கம்போடிய அரசு ஒப்புதல்

கம்போடியாவில் நடைபெறும் உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்ட பாடல் இசைத்தகடு சென்னையில் வெளியிடப்பட்டது.
கம்போடியாவின் கெமர் மொழியில் திருக்குறள் - கம்போடிய அரசு ஒப்புதல்
x
கம்போடியாவில் நடைபெறும் உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்ட பாடல் இசைத்தகடு சென்னையில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்பின் நிர்வாகி தணிகாசலம், அங்கோர்வாட் தமிழ் சங்க தலைவர் சீனிவாச ராவ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திருக்குறளை தமிழ் மொழியிலிருந்து கெமர் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஆணையை அந்நாட்டு அரசு, இந்த மாதம் கம்போடியாவில் நடைபெறும் உலக தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் வெளியிட உள்ளதாக தெரிவித்தனர். மேலும், கம்போடிய அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தமிழர்களுக்கும், கெமர் மொழி மக்களுக்கும் உள்ள கலாச்சார உறவு குறித்து கண்டறிந்து உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்