"இந்திய அரசு ஒரு தலை பட்சமாக முடிவு எடுக்கிறது" - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் புகார்

எந்த நாடும் இந்தியாவின் உள்விவகாரங்களில், தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்திய அரசு ஒரு தலை பட்சமாக முடிவு எடுக்கிறது - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் புகார்
x
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி உரையாற்றினார். அப்போது அவர்,  இந்திய அரசின்  ஒரு தலைபட்ச மற்றும் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் தொலைநோக்கு மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் விஜய் தாக்கூர் சிங், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சட்டபூர்வமானது என கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் என்றும், குழந்தைகளுக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்றும் பதிலடி கூறியுள்ளார். மேலும், சமூக நீதி, கல்வி, தகவல் மற்றும் வேலைக்கான உரிமைகளை வழங்கும் என்றும் கூறினார். எந்த நாடும் இந்தியாவின் உள்விவகாரங்களில், தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்