சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்
x
லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. லண்டனில், இந்திய தூதரக அலுவலகம் முன் கூடியிருந்த இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் தேசிய கொடியுடன் வந்த ஒரு கும்பல், இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது. ஒரு கட்டத்தில், பிளாஸ்டிக் பாட்டில், ஷூ மற்றும் அழுகிய முட்டைகளை வீசி, இந்தியர்கள் மீது தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. 

இந்தியர் மீது தாக்குதல்: லண்டன் மேயர் கண்டனம்

இந்த தாக்குதலில் இந்திய பெண்கள், குழந்தைகள் சிலருக்கு  லேசான காயம் ஏற்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்து செயல்பட்டு, வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, லண்டன் மேயர் சாதிக்கான் தனது டுவிட்டர் வலைப்பக்கம் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்