24 மணி நேரத்தில் 29 பேர் பலி - அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 16 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் 29 பேர் பலி - அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு
x
அமெரிக்காவில் நேற்று  வணிக வளாகம் ஒன்றில்  மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டத்தில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ நகரிலேயே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் உயிருக்கு போராடி வருகின்றனர். துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்ததும், அந்த நபரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் நடத்திய நபர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 24 வயது அமெரிக்க இளைஞர் என தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் இன்று, ஒஹியோ மாகாணத்தில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்திய நபர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த நடைபெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவங்களால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின், 251வது சம்பவம் இது என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்