இலங்கை : ராணுவ வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - 6 ராணுவ வீரர்கள் பலி

இலங்கை கிளிநொச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ராணுவ வாகனம் மீது, ரயில் மோதியதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இலங்கை : ராணுவ வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - 6 ராணுவ வீரர்கள் பலி
x
இலங்கையில் உள்ள கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங் ஒன்று உள்ளது. இந்த வழியாக சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில் எதிர்பாராத விதமாக ராணுவ வாகனத்தின் மீது மோதியது. இதில் 
ராணுவ வாகனத்தில் பயணித்த ஏழு ராணுவ வீரர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி மேலும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ரயில் மோதி 6 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்