பதவி விலகிய அமைச்சர்கள் ராஜபக்சேவுடன் சந்திப்பு

இலங்கையில் பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினர்.
பதவி விலகிய அமைச்சர்கள் ராஜபக்சேவுடன் சந்திப்பு
x
இலங்கையில் பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினர். அவரின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீலங்கா இஸ்லாம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்கள் அனைவரும், அதற்கான  சூழ்நிலை குறித்து ராஜபக்சேவிடம் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார். இனங்கள் மற்றும் மதங்கள் இடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், பதவி விலக நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். 
பதவி விலகல் இனங்களுக்கிடையே பெரும் பிரிவினையை ஏற்பட்டுத்திவிடக் கூடாது என்று ராஜபக்சே கேட்டுக் கொண்டதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்